"வரதட்சணை கேப்ப?" .. மாமியார் கொடுமை செய்ததாகக் கூறி மருமகள் செய்த பரபரப்பு காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மருமகளே மாமியார் மீது மண்ணெண்ணெய் உற்றி எரித்துக் கொன்றதை அடுத்து போலீஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மணியம் பள்ளத்தைச் சேர்ந்த ரமேஷ், 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பிரதீபா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 9 மாத குழந்தை இருந்த நிலையில், பிரதீபாவுக்கும் அவரது மாமியார் ராஜாம்பாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து நேற்று மதியம் ராஜாம்பாள் 100 நாள் வேலைத்திட்டத்துக்காக சென்றுவிட்டு வந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவரது மருமகள் பிரதீபா 5 லிட்டர் மண்ணெண்ணெயை ஊற்றி வீட்டில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 90 சதவீதம் தீக்காயத்துடன் மீட்கப்பட்ட ராஜாம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து பிரதீபாவை கைது செய்து போலீஸார் விசாரித்தபோது, தனது மாமியார் ராஜாம்பாள் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும், தன்னையும் தனது கணவரையும் ஒன்று சேரவே விடாமல் சதி செய்வதாகவும், அதனால் அவரைக் கொல்ல திட்டம் தீட்டி இப்படி செய்ததாகவும் பிரதீபா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
