'ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம்'... 'ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை'... 'நிதியமைச்சரின் இன்னும் பல முக்கிய அறிவிப்புகள்'!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Mar 24, 2020 04:37 PM

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில் இன்று செய்தியாளர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

No minimum balance charge, No charge for ATM cash withdraw

நிதி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2020 வரையில் வழங்கப்படும். காலதாமத கட்டண செலுத்துதலுக்கு வட்டி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

வருமான வரி சார்ந்த அத்தனைப் பணிகளுக்கும் ஜூன் 30-ம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்படும். இதேபோல், ஆதார் மற்றும் பான் இணைப்புக்கு ஜூன் 30, 2020 வரையில் கால அவகாசம் வழங்கப்படும். ஜிஎஸ்டி செலுத்துவோரில் 5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ளோருக்கு வட்டி, பெனால்டி, தாமதக் கட்டணம் என எதுவும் விதிக்கப்படாது.

டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த வங்கியின் ஏ.டி.எம் மூலமும் சேவை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதேபோன்று வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை  அதாவது மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை கட்டுவதற்கான கடைசி தேதியாக ஜூன் 30 -ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தாமதமாக கட்டுவோருக்கு விதிக்கப்படும் வட்டி சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நிதி சார்ந்த எமெர்ஜென்ஸி காலமாக அறிவிக்க வேண்டிய தேவை இந்தியாவில் ஏற்படவில்லை’ இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags : #MONEY #FINANCE #NIRMALA SITHARAMAN #ATM #BANK #CHARGE