‘கொரோனா’ பரவலைத் தடுக்க... ‘இன்று’ முதல் ‘வங்கி’ வேலை நேரம், சேவையில் ‘மாற்றம்’... ‘விவரங்கள்’ உள்ளே...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 23, 2020 12:18 PM

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்திய வங்கிகள் சங்கம் புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி வங்கிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

CoronaVirus Lockdown Banks Timing Service Changes Details Inside

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் தேவையற்ற பயணங்களையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் இன்று முதல் மார்ச் 31 வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடைபெறும் எனவும், புதிதாக நகைக்கடன் வழங்குவது, வீட்டுக்கடன் வழங்குவது உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் இனி நடைபெறாது எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் இந்த விதிமுறைகளை அமல்படுத்த ஒரு சில நாட்கள் எடுத்துக்கொள்ளவும் சில வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எல்ஐசி காப்பீட்டுதாரர்கள் தங்கள் பிரீமியம் தொகையை செலுத்த ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags : #MONEY #CORONAVIRUS #LOCKDOWN #BANK #TIMING #SERVICE #CHANGES