"ஓ... இந்த ஏரியா பக்கம் வர பயமா?..." 'வெளியானது' கொரோனாவின் 'வீக்னெஸ்...' "இவ்வளவு நாளா தெரியாம போச்சே..."
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், உயரமான மலைப்பகுதிகளில் பரவும் வேகம் குறைவாகவே உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நிலப்பரப்பில் வேகமா பரவும் அளவுக்கு மிக உயரமான பகுதிகளில், அதாவது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக காணப்படுகிறது.
திபெத், பொலிவியா மற்றும் ஈகுவடாரில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கொரோனாவின் தாக்கம் மிகக்குறைவாக காணப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தியாவிலும் உயரமான பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளில், பெரும்பாலான பாதிப்புகள் சமவெளி பகுதிகளிலேயே காணப்படுகின்றன. அங்கு மலைப்பகுதிகளில் குறைவான அளவிலேயே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் மாறும் வெப்பநிலை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. மிக அதிக உயரமான பகுதிகளில் நிலவும் மாறக்கூடிய வெப்பநிலை, இயற்கையின் கிருமிநாசினியாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. உயரமான பகுதிகளில் காணப்படும குறைவான காற்றழுத்தமும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்புகள் 80 ஆயிரத்தை கடந்த நிலையிலும் கூட, அதிக மலைப்பகுதிகள் நிறைந்த திபெத்தில் பாதிப்பு 100 என்ற அளவிலேயே காணப்படுவது இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும். நேபாளத்தில் 90 விழுக்காடு கொரோனா பாதிப்புகள் சமவெளி பகுதிகளிலேயே ஏற்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.