'பாலுக்காக அழுத குழந்தை...' 'ட்ரெயின் எடுத்துட்டாங்க...' 'பால் வாங்க ஜெட் வேக ஸ்பீடில் ஓடிய போலீசார்...' கடைசியில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jun 05, 2020 11:00 AM

கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு சிறப்பு இரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

rpf police who ran to buy milk for 4 month old baby

இவ்வாறு பயணம் செய்யும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு சில நேரங்களில் உணவு தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரெயில் ஒன்றில் 4 மாத குழந்தையை உடைய ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார்.

ஷரிஃப் ஹாஷ்மி இரயில் பயணம் தொடங்கியது முதல் தன் குழந்தைக்கு பால் வாங்க முயற்சித்துள்ளார். அதேபோல் ரெயில் கடந்த 31-ந்தேதி போபால் ரெயில்வே நிலையம் வந்துள்ளது. இதற்கு முன் நின்ற சில ரெயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க முயற்சி செய்து பால் கிடைக்காததால் போபால் ரெயில் நிலைய ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங்கிடம் தன் நிலையை விளக்கியுள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் அங்கும் பால் கிடைக்கவில்லை.

உடனே ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவ் இரயில்வே ஸ்டேஷன் வெளியே சென்று பால் வாங்கி வருவததாக கூறி ஓடியுள்ளார். ஆனால் அந்த ஸ்டேஷன்னில் 10 நிமிடங்கள் மட்டுமே இரயில் நிற்கும் என்பது அவருக்கு தெரியும்.

இதனால் தன்னுடைய வேகமான ஓட்டத்தால் வெளியே சென்று பால் வாங்கி இரயில் நிலையம் அடைந்துள்ளார். ஆனால் அவர் உள்ளே வரும் போது இரயில் புறப்பட்டுள்ளது.

ஆனால் குழந்தைக்கு எப்படியாவது பாலை சேர்க்கவேண்டும் என்று எண்ணிய யாதவ் இரயில் பின்னாடியே ஓடியுள்ளார். இறுதியில் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பாலை சேர்த்துள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் இரயில் நிலையத்தில் இருக்கும் சி.சி.டி.வியில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறிய யாதவ், அந்த குழந்தையின் அழுகையும், தாயின் கண்ணீரும் தான் என்னை அப்படி வேகமாக ஓட வைத்தது. என்னுடைய ஓட்டத்திறன், அந்த பெண்ணிடம் பால் பாக்கெட்டை கொண்டு சேர்க்க உதவியாக இருந்தது. ஆனால், நான் பால் வாங்கிய பின் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும், ரெயில் புறப்பட தொடங்கியது. என்னுடைய வலிமையாலும் குழந்தைக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலும் ரெயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்' எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த செய்தியை அறிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : #MILK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rpf police who ran to buy milk for 4 month old baby | India News.