டிக் டாக் செய்த 'மனைவி'.. ஆத்திரத்தில் 'சகோதரருடன்' சேர்ந்து.. 'கணவர்' செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 28, 2019 02:09 PM

மனைவி டிக்டாக் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர் சகோதரருடன் சேர்ந்து அவரைக் கொன்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Andhra Man kills wife for posting videos on TikTok

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நரசரா பேட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சித்தலா சின்ன நரசையா(27) இவரது மனைவி சுவர்தா(19). திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதை சுவர்தா வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதை நரசையா கண்டித்துள்ளார்.ஆனால் வீடியோ பதிவிடுவதை சுவர்தா நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நரசையா தன்னுடைய சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து நவம்பர் 17-ம் தேதி சுவர்தாவை கொலை செய்துள்ளார். நரசையா துண்டைக் கொண்டு சுவர்தாவின் மூச்சை நிறுத்தியுள்ளார், வெங்கையா காலை பிடித்துள்ளார். அதன்பின் அவரது உடலை பொட்லுரு சுடுகாட்டில் இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'' கணவருக்கு டிக் டாக் செய்வது பிடிக்கவில்லை என்பதால் தன்னுடைய மகளுடன் சுவர்தா வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். அப்போதும் அவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதை நிறுத்தவில்லை. ஹாஸ்டலில் தங்கியிருந்த சுவர்தாவை கடந்த 14-ம் தேதி நரசையா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் 17-ம் தேதி சுவர்தாவை தன்னுடைய சகோதரனுடன் சேர்ந்து கொன்று அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்,'' என தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத சடலம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நகையை வைத்து போலீசார் சுவர்தா கொலை செய்யப்பட்டதை கண்டறிந்து உள்ளனர்.

மேலும் நரசையா சகோதரர் வெங்கையா 1 லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்லும் சிசிடிவி காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்தது. இதனை வைத்து போலீசார் சகோதரர்கள் இருவரையும் விசாரிக்க இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கொலை வழக்கின் கீழ் சகோதர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : #MURDER