‘மூக்குத்தி’.. ‘பிங்க் கலர் பேண்ட்’! கை, கால்கள் கட்டப்பட்டு ஏரியில் மிதந்த இளம்பெண்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 22, 2019 10:59 PM

பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman dead body found in Chennai Perumbakkam lake

சென்னை பெரும்பாக்கம் ஏரியில் இளம்பெண் ஒருவர் சடலமாக மிதப்பதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், ஏரியில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். அப்போது கை, கால்கள் நைலான் கயிறு மூலம் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுவரை இறந்த பெண் குறித்த விவரம் ஏதும் கிடைக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பெண் நீலம் மற்றும் பிங்க் கலரில் முழுக்கை சட்டையும், பிங்க் கலரில் பேண்ட் அணிந்திருந்துள்ளார். மூக்குத்தி குத்தியிருந்த பெண்ணின் உடலில் வேறு எந்த அடையாளம் சரியாக கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் அதிகமான ஐடி கம்பெனிகள் இருப்பதால், இறந்த பெண் ஐடி ஊழியராக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை அல்லது காதல் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு எதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் காணாமல் போன பெண்கள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #CHENNAI #WOMAN #DIES #LAKE #PERUMBAKKAM