'பழைய' பகை.. 'ரத்த' வெள்ளத்தில் சரிந்த இளைஞர்.. பேஸ்புக்கில் போட்டோ 'பகிர்ந்த' கேங்ஸ்டர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 20, 2019 06:44 PM

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகேயுள்ள பண்டோரி கிராமத்தை சேர்ந்த மன்தீப் சிங்(26) என்னும் இளைஞர், நேற்று மாலை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மன்தீப்பை வழிமறித்து, வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

We did it, says Punjab gangster in Facebook post on 26-yr-old shot 8 t

தொடர்ந்து மன்தீப்பை சுட்டது தொடர்பாக துப்பாக்கியுடன் பேஸ்புக்கிலும் அவர்கள் புகைப்படம் பகிர்ந்துள்ளனர். அதில், ''பண்டோரியில் மன்தீப் சிங்கை கொலை செய்தது நாங்கள்தான். எங்கள் மரியாதைக்காக இந்தக் கொலையைச் செய்தோம். மன்தீப் உடன் எங்களுக்கு பழைய பகை இருந்தது. எதிர்காலத்தில் யாராவது இதுபோன்ற தவறு செய்தால், அவர்கள் இதேபோன்ற தலைவிதியை அனுபவிப்பார்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த ஹர்வீந்தர் சிங் சந்து என்பவர் தான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இந்த குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார். எனினும் கொலையாளிகள் இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.