‘சண்டை வேண்டாம்’... ‘கெஞ்சிய குழந்தைகள் கண் முன்னே’... ‘உறவினர் மகனால்’... 'தாய்க்கு நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 26, 2019 03:51 PM

பணத்தகராறில் குழந்தைகளின் கண்முன்னே, உறவினர் மகனால், தாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mom murdered in front of her children due to money issues

தஞ்சையில் கணவர் இறந்தநிலையில், அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தவர் வனிதா. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவர், கனகராஜ் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கனகராஜ், வனிதா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், வனிதாவின் சகோதரி மகனான பிரகாஷ் என்பரிடம், வனிதா 2 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. இதில் சுமார் ஒன்றரை லட்சத்தை வனிதா திருப்பித் தந்துள்ளார்.

மீதி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, பிரகாஷ் தொடர்ந்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வனிதா மீது காவல்நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரகாஷ், அவர் நண்பர் சூர்யா மற்றும் மகேஷ்வரி என்ற பெண் ஆகிய 3 பேரும் சேர்ந்து, வனிதாவின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது, வனிதா பழகி வந்த கனகராஜூவும் உடனிருந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்க, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரும் எழுந்து, அம்மாவிடம் சண்டை போட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர். எனினும், தகராறு முற்றியநிலையில், பிரகாஷ் மற்றும் உடன் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், வனிதா மற்றும் கனகராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். குழந்தைகள் கதறித் துடிக்க, அவர்களின் கண்முன்னே தாய் மற்றும் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர். குழந்தைகள் அனாதைகளாகி உள்ளனர்.

Tags : #MURDER #TANJORE #CHILDREN