எதிர்ப்பை மீறி.. 17 வயது சிறுமியை.. 'காதல்' திருமணம் செய்த இளைஞர்.. தலை 'துண்டிக்கப்பட்டு' படுகொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 27, 2019 12:16 AM

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த நம்பிராஜ் என்னும் இளைஞரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண்ணின் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நம்பிராஜ் அந்த பெண்ணை எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Young man Killed in Tirunelveli, police Investigate

இருவரும் திருநெல்வேலி டவுனில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் நண்பர்களை பார்த்து வருவதாக கூறி வெளியில் சென்ற நம்பிராஜ் வீடு திரும்பவில்லை. பதட்டத்துடன் வீட்டில் இருந்த அவரது மனைவிக்கு ரெயில்வே டிராக்கில் நம்பிராஜ் தலை துண்டித்து இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்தது.

குறுக்குத்துறை ரயில்வே நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நம்பிராஜ் சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து விரைந்த நெல்லை ரயில்வே காவல் துறை மற்றும் டவுன் போலீசார் நம்பிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் சகோதரர்கள் சமாதானம் பேசுவதாக கூறி நம்பிராஜை அழைத்து சென்று அவரை கொலை செய்த விவரம் தெரியவந்தது. தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியின் சகோதரர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.