'சொன்னா கேக்க மாட்ட?'.. கள்ளக்காதல் உறவை கைவிடாத நபர்.. நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 20, 2019 12:12 PM

மதுரை மேல அனுப்பானடியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

man keeps illegal relationship with woman, her brother kills him

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மகன் ரமேஷ். அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த இவர் திருமணமாகி, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அதே சமயம், அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அப்பெண்ணின் சகோதரர் செல்வத்துக்கும், ரமேஷ்க்கும் இடையில் அடிக்கடி தகராறு மூண்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த செல்வம் தனது நண்பர்களின் உதவியுடன் ரமேஷின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பலியாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை கொன்ற 4 பேரையும் அவனியாபுரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags : #MURDER #MADURAI