இடைவிடாது அழுத 'ஒன்றரை' வயது குழந்தை.. 'துணியால்' முகத்தை பொத்திய தாய்.. 'உயிரிழந்த' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 23, 2019 04:27 PM

வேலூர் மாவட்டம் வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் என்பவரது மனைவி பவித்ரா (வயது 22). இவருக்கு ரம்யா (3), மவுலிகா (1½) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பவித்ரா குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் பவித்ரா வேலை செய்து வருகிறார்.

Mother kills one and half year old baby in Walajapet

நேற்றிரவு குழந்தை மவுலிகா தொடர்ந்து அழுதுகொண்டே இருக்க, துணியால் பவித்ரா குழந்தையின் வாயை மூடி அழுகையை அமர்த்த முயற்சி செய்துள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா வாலாஜா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராம அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பவித்ராவை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Tags : #MURDER #VELLORE