‘மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொன்றுவிட்டு’.. ‘தாய் செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘கோவை அருகே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 27, 2019 10:00 AM

கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore Mother Kills Differently Abled Daughter Son Herself

கோவை அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவருக்கு திவ்யதர்ஷினி மற்றும் பிரனேஷ்  என்ற 2 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌரியின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து போய் இருந்த கௌரி தனது 2 குழந்தைகளுக்கு தூக்கு மாட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரில் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #COIMBATORE #MOTHER #MURDER #DAUGHTER #SON #SUICIDE