‘மிக்ஸியை விற்று குடித்த கணவன்’.. மனைவி கொடுத்த கொடூர தண்டனை..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 22, 2019 08:54 AM

மிக்ஸியை விற்று குடித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wife killed husband for selling mixie in Tiruppur

திருப்பூர் மாவட்டம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி உமாதேவி. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் வீட்டில் இருந்தவாறு காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது மது பழக்கத்துக்கு அடிமையானவர், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வெங்கடேசன் பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் வெங்கடேசன் கட்டையால் அடித்து இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவதன்று வீட்டில் இருந்த மிக்ஸி காணாமல் போனது குறித்து வெங்கடேசனிடம் அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு, மிக்ஸியை விற்றுதான் மது குடித்துவிட்டு வந்தேன் என வெங்கடேசன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உமாதேவி அருகில் இருந்த கட்டையால் அவரை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து வெங்கடேசன் மயங்கி விழுந்துள்ளார். இது வெளியே தெரியாமல் இருக்க பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக உமாதேவி நாடகமாடியது போலீசார் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #KILLED #TIRUPPUR #WIFE #HUSBAND #MIXIE