‘5 சவரன் தங்க சங்கிலி’.. ‘பறித்த எதிர்வீட்டுக்காரர்’.. தடுத்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 27, 2019 01:21 PM

மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai woman murdered when neighbour snatching gold chain

மதுரை திருமங்கலம் அன்னகாமு தோட்டத்தை சேர்ந்தவர் காவேரி அம்மாள் (55). இவர் தனது வீட்டில் அருகிலேயே பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். எதிர்வீட்டில் வசித்து வருபவர் காதர் பாஷா ஒளி. இவர் நேற்று காவேரி அம்மாளின் வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை காவேரி அம்மாள் தடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது காதர் பாஷா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவேரி அம்மாளின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்போது அவர்களையும் கத்தியைக் காட்டி காதர் பாஷா மிரட்டியுள்ளார். பின்னர் காவேரி அம்மாளை வீட்டுக்குள் இழுத்துச்சென்று கேஸ் சிலிண்டரை திறந்து தீவைக்க முயன்றுள்ளார்.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அங்கு கத்தியுடன் நின்றுகொண்டிருந்த காதார் பாஷா கைது செய்து, கேஸ் சிலிண்டரை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.