‘கேட்டேன் குடுக்கவே முடியாதுன்னாங்க’.. இளைஞரால் ‘சித்திக்கு’ நடந்த கொடூரம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 25, 2019 12:31 PM

கோவில்பட்டியில் பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சித்தியைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Kovilpatti Youngster Killed His Step Mother Over Money Issue

தூத்துக்குடி மாவட்டம் நடராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகேஷ்வரியின் தங்கை கோகிலாவை பாண்டி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள், மணிகண்டன் என்ற மகன் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு மகேந்திரன் என்ற மகன் உள்ளார். நியாய விலைக்கடை ஊழியராக வேலை செய்துவந்த பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் முதல் மனைவியின் மணிகண்டன் மது அருந்திவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சிறைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பாண்டி இறப்பிற்கான பணிக்கொடை ரூ.2 லட்சம் அரசிடமிருந்து வந்துள்ளது. கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் தனது சித்தி கோகிலாவிடம் அந்தப் பணத்தைக் கேட்டு தகராறு செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுலா சென்றிருந்த கோகிலாவின் மகன் மகேந்திரன் நேற்று காலை வீடு திரும்பியபோது, அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதைப் பார்த்து சிறுவன் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர்.  அவர்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கோகிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் மணிகண்டன்தான் கோகிலாவைக் கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மணிகண்டனைக் கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், “என் தந்தையின் பணிக்கொடையை பிரித்துக் கொடுக்கும்படிக் கேட்டேன். ஆனால் பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்த சித்தி ஒரு கட்டத்தில் பணத்தை தர முடியாது என்றார். அதில் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் முற்றி, வீட்டிலிருந்த மரச்சேரை தூக்கி எறிந்தேன். பின் அதிலிருந்த மரக்கட்டையால் அடித்ததில் சித்தி இறந்துவிட, வேறு சட்டையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து போய்விடேன்” எனக் கூறியுள்ளார். பணத்திற்காக இளைஞர் சித்தியைக் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #CRIME #MONEY #SON #STEPMOTHER