‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...!’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 21, 2019 11:40 AM

குடிக்க பணம் தர மறுத்த அப்பாவை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son murdered father for money near Nerkundram in Chennai

சென்னை நெற்குன்றம் புவனேஸ்வரி நகரில் உள்ள லட்சுமணன் தெருவை சேர்ந்தவர் முத்து (80). இவர் சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசு ஊழியரான இவருக்கும் மாதந்தோறும் ஓய்வூதியம் வந்துள்ளது. தனது செலவுபோக மீதி பணத்தை குடும்பத்தினருக்கு கொடுத்து வந்துள்ளார். இவரது கடைசி மகன் பாலஜி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.

ஆனால் சரிவர வேலைக்கு செல்லாமல் எந்நேரமும் குடித்து வந்துள்ளார். மேலும் குடிப்பதற்கு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார் எனக் கூறப்படுகிறது. பணம் தரவில்லை என்றால் அடித்து துன்புறுத்துவதாக கூறப்படும் நிலையில், வழக்கம்போல நேற்றும் தனது தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை பணம் இல்லை என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலஜி கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் கட்டையால் தனது தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த முத்துவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துவின் உடலில் காயம் இருந்ததால் இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிப்பதற்கு பணம் தர மறுத்தால் தந்தையை மகன் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. ஆனால் தனது தந்தை இறந்ததுகூட தெரியாத அளவுக்கு மகன் பாலாஜி குடிபோதையில் இருந்துள்ளார். காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், நான் வழக்கம்போலதான் அடித்தேன். அப்பா இறந்தது எனக்கு தெரியாது என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.

Tags : #CRIME #MURDER #KILLED #MONEY #CHENNAI #SON #FATHER