‘வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்’!.. மகளை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய தாய்..! அதிர வைத்த காரணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 20, 2019 12:57 PM

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagai woman kills her daughter and tried to committs suicide

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன்-உமா மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் ஜனனி (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்துள்ளார். ராஜ்குமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனனியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஜனனிக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜனனியை அழைத்து சென்ற ராஜ்குமார் அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதுகுறித்து ஜனனியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசாரின் அறிவுரையின்படி ஜனனி பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜனனிக்கும் அவரது தாய் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் வந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துகொண்டு  சென்றுள்ளனர். வீட்டினுள்ளே மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தாய் உமா மகேஸ்வரியும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளை எரித்து கொன்ற தாயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : #HONOURKILLING #CRIME #MURDER #MOTHER #DAUGHTER #NAGAPATTINAM