‘கார் பின் சீட்டில் கிடந்த சடலம்’! பார்க்கிங்கில் மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை..! அதிரவைத்த பிரேத பரிசோதனை..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Nov 26, 2019 06:02 PM

அமெரிக்காவில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad girl sexually assaulted and murdered in USA

ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட ரூத் ஜார்ஜ் (19) என்ற இளம்பெண் சிகாகோ இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை பயின்று வந்துள்ளார். இதனிடையே கடந்த சனிக்கிழமை தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது பல்கலை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவரது காரின் பின் இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அதில் இளைஞர் ஒருவர் ரூத் ஜார்ஜை பார்க்கிங் ஏரியாவில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். சுமார் அரைமணி நேரம் கழித்து அவர் வெளியே வருகிறார். ஆனால் கடைசி வரை ரூத் ஜார்ஜ் வெளியே வரவில்லை. இந்நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் டோனல்ட் துர்மன் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ரூத் ஜார்ஜை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #MURDER #KILLED #CRIME #HYDERABAD #USA