‘விஜய் தேவரகொண்டாவின் பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி’.. ‘பெண்களிடம் ஆபாச உரையாடல்!’.. ‘பொறி வைத்து பிடித்த போலீஸார்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 07, 2020 04:02 PM

நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கி பெண்களிடம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

fake facebook account in the name of a actor, fraudster arrested

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் புகழ்பெற்றவர்.  அதன் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் சில திரைப்படங்கள் நடிக்கத் தொடங்கி இளசுகளின் நெஞ்சில் இடம் பிடித்தவர்.

குறிப்பாக விஜய் தேவரகொண்டாவிற்கு இளம் பெண் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தெலுங்கானா நபர் ஒருவர், விஜய் தேவரகொண்டாவின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கைத் தொடங்கி, பெண்களுடன் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்த விஷயம் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் காதுகளை எட்டியதாகவும், இதனை அடுத்து சைபர் க்ரைம் போலீஸாரிடத்தில் விஜய் தேவரகொண்டா புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் போலீஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் ஒருவர், அந்த பொலி நபரிடம் போன் பேசி ஐதராபாத்துக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது அங்கு காத்திருந்த போலீஸாரும், விஜய் தேவரகொண்டாவின் தரப்பு ஆட்களும் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #FACEBOOK #FRAUDSTER #FAKE