எப்ப பார்த்தாலும் டிவி தானா...? 'டிவிய ஆஃப் பண்ணிய அம்மா...' 'பேசாம மாடிக்கு போன பையன், ஒரு துணிய எடுத்து...' நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் பொது ஊரடங்கின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் முன்னேற்பாடாக குழந்தைகள் வெளியே விளையாடவும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக பிள்ளைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி முன்னே தான் அமர்த்திருப்பதாக பெற்றோர் கவலைப்படுகின்றனர். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் சாதனமாக தொலைக்காட்சியே உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவன் நீண்ட நேரம் டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புணே மாவட்டம் பிப்வேவாதி பகுதியில் உள்ள ஆதர்ஷ் சாவலில் அம்மா, மகன் மற்றும் ஒரு மகள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். சில நாட்களாக டிவியில் மூழ்கியிருந்த தன் மகன் எப்பவும் போல சம்பவத்தன்றும் காலையில் இருந்து மாலை வரை தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்ததால் சிறுவனை கண்டிக்கும் விதமாக, "ஏன் எப்பவும் டிவி பார்த்துட்டு இருக்க, உடல்நலத்திற்கு நல்லது இல்லை. டிவிய ஆப் பண்ணு" என்று கூறியுள்ளார். மேலும் டிவியை பார்த்துக் கொண்டிருந்ததால் ரிமோட் எடுத்து டிவியை அணைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டின் டிவி பார்க்கமுடியாத விரக்தியில் வீட்டின் மேல் தளத்திற்கு வந்து துணியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளான். சகோதரனை சமாதானம் செய்ய மேலே சென்ற சகோதரி சிறுவனின் நிலை பார்த்து கத்தி கூச்சலிட்டு பார்த்து தாயை அழைத்துள்ளார்.
சிறுவனை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் போது ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சிறுவனின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்