திடீர்னு ‘சேனல்’ தெரியலையா?... உடனே ‘இத’ பண்ணுங்க... ‘ஜீ டிவி’ நிறுவனம் வெளியிட்டுள்ள ‘முக்கிய’ அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 24, 2019 12:27 PM
ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் நேயர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், “ஜீ நிறுவனத்தின் அனைத்து டிவி சேனல்களும் அரசு கேபிள் டிவி, எஸ்.சி.வி, வி.கே, டிஜிட்டல் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி டி.டி.எச் ஆப்பரேட்டர்களிடமும் கிடைக்கும். மேலும், ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டாடா ஸ்கை, டிஷ் டிவி, சன் டிரெக்ட் ஆகியவற்றிலும் கிடைக்கும்.
மேலும் சேனல்களை பார்க்கும் விலையில், எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. ஜீ பிரைம் தமிழ் எஸ்.டி பேக் கட்டணம் 10 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவே மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பேக் ஆகும்.
இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி தங்கள் சேனல் பட்டியலிலிருந்து ஜீ சேனல்கள் நீக்கப்பட்டதாக நேயர்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளன. நேயர்கள் தங்கள் மாதாந்திர கட்டணத்தை செலுத்தியிருந்தால், உடனடியாக உங்கள் கேபிள் ஆப்பரேட்டர்களை தொடர்புகொண்டு, ஜீ சேனல்களை ரீஆக்டிவேட் செய்யக் கோருமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
