'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கடந்த வருடம் முழுவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதுதவிர செலவை குறைக்கிறேன் என ஐடி, பேங்க் என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பங்குக்கு ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பின. ஆனாலும் 2020-ம் ஆண்டு இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை பொதுவாக அனைத்து தரப்பினர் மனதிலும் நிலவியது.

ஆனால் கொரோனாவால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம் குப்புற விழுந்து விட்டதால் வளரும், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி பணக்கார நாடுகளும் செய்வதறியாது தவித்து கொண்டிருக்கின்றன. 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் ஊரடங்கால் சம்பளம் கொடுக்க முடியாமல் நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்து உள்ளன.
அந்த வகையில் பிரிட்டனை சேர்ந்த கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவனமான பிபி(BP) இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு 70,100 பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் சுமார் 15% ஊழியர்களை சிக்கன நடவடிக்கையாக அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
மேலும் அலுவலக வேலை செய்வோரை தான் அதிகமாக வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கை என்றாலும் இன்னும் செலவு நடவடிக்கைகளை நிறுவனம் குறைத்துக்கொள்ள வேண்டும் என, நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பெர்னார்ட் லூனி தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
