'அப்பாவும் மகனும் மல்லுக்கட்டிட்டு இருந்தப்போ...' 'குறுக்க போய் நின்ன அம்மாவ...' போதையில் மகன் செய்த வெறிச்செயல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தை மகன் சண்டையில் தடுக்க சென்ற தாயின் 'வெட்டுக்கத்தியால் பலமாக தாக்கிய மகனை போலீசார் கைது செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் மதுகுமார். இவர் தனது பெற்றோர் ஜெயந்தி (49) நாகராஜன்(55) ஆகியோரோடு கடந்த ஆறு மாதங்களாக கொட்டாரம் தேவர் காம்பவுண்டிலுள்ள சங்கர் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
மதுகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதுவிற்கு அடிமையான மதுகுமாருக்கும் அவரது தந்தைக்கும் இடையே இதன் காரணமாக அடிக்கடி தகராறு வந்த வண்ணம் இருந்துள்ளது. இதேபோல் இன்றும்(27-05-2020) மது போதையுடன் வந்த மதுகுமாருக்கும் அவரது தந்தை நாகராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொஞ்ச நேரத்தில் வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. இதனை கண்ட மதுகுமாரின் அம்மா ஜெயந்தி தேங்காய் துருவி கொண்டிருந்ததை விட்டு, கணவரையும் மகனையும் தடுக்க வந்துள்ளார். ஆத்திரமடைந்த மதுகுமார் அங்கே கிடந்த தேங்காய் துருவும் கத்தியை எடுத்து ஜெயந்தியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ஜெயந்தி படுகாயமடைந்தார்.
பலத்த காயமடைந்த ஜெயந்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் தன்னையறியாமல் பெற்ற அன்னையையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.