மதிய நேரத்துல யாரோ 'கத்துற' சத்தம் கேட்டுச்சு... அங்க போயி பாத்தா... 'நடுரோட்டில்' நடந்த 'கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேயுள்ள இடையான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், பழவேற்காடு பஜாரில் இருந்து தனது டூ வீலரில், மத்திய நேரத்தில் சூரியபிரகாஷ் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில், கத்தி, அரிவாளுடன் சில மர்ம நபர்கள் வழிமறித்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சூரியபிரகாஷ் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்த நிலையில் அதற்குள் அந்த கும்பல் தப்பியோடியது.
இதனையடுத்து, வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூரியபிரகாஷை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், போலீசார் இந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சூரியபிரகாஷ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது இடையான்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினருடன் சூரியபிரகாஷிற்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சூரியபிரகாஷின் தலை, முகம் ஆகிய இடங்களில் தான் அரிவாள் வெட்டு அதிகம் விழுந்துள்ளது.
இதில் ரத்தம் அதிகம் வெளியேறியதால் தான் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
