போதையில் உச்சம் தொட்ட ஆசாமி!.. 3 மணி நேரம் தொடர் நீச்சல்!.. போலீஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை அருகே மதுபோதையில் ஒருவர் ஏரியில் மூன்று மணி நேரம் இடைவிடாமல் நீச்சல் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள ஏரியில், அதிகாலை முதல் ஒரு நபர் நீந்திக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை கரைக்கு திரும்புமாறு அழைத்தனர். ஆனால், அந்த நபர் அதை காதில் வாங்காமல் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தார்.
பலரும் பலதடவை அழைத்தும் வராததால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கரைக்கு வரும் படி அழைத்தனர். அப்போதும் அவர் வராததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மீட்டனர். சுமார் 3 மணி நேரம் அவர் நீச்சல் அடித்துள்ளார்.
கரைக்கு கொண்டு வந்த போது அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், காவல்துறையினர் விசாரித்த போது அவரால் சரியாக பதில் கூற முடியவில்லை. போதை தெளிந்த பிறகு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
