‘திடீரென கேட்ட வெடிச்சத்தம்’.. ‘தூள் தூளான கதவு, ஜன்னல்’.. ‘அதிகாலையில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 24, 2019 06:37 PM

ஆற்காட்டில் திடீரென மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 2 வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.

2 houses severely damaged in electric explosion over gas leak

ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் இவருடைய வீட்டுக்குள்ளிருந்து திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வர, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் வெளியே வந்துள்ளனர்.

இந்த விபத்தில் தனசேகரின் வீட்டுச் சுவர் பலமாக விரிசலடைந்து, கதவு, ஜன்னல்கள் உடைந்து தூள் தூளாகச் சிதறியுள்ளன. மேலும் வீட்டுக்குள் இருந்த டிவி வெடித்துச் சிதறி,  ஷோபா, ஸ்கீரின் போன்ற பொருட்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த வீட்டில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தின் அதிர்வால் அருகில் வசிக்கும் ரகுபதி என்பவருடைய வீட்டுச் சுவரும் பிளவுபட்டுச் சேதமடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா, போலீஸார் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளார். மர்மப்பொருள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது வாயுக்கசிவு காரணமாக மின்சாதனப் பொருட்கள் எரிந்து வீடு சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : #ARCOT #HOUSE #TV #DAMAGE #ELECTRIC #EXPLOSION #GAS #LEAK #FIRE