'10 லட்சம் ரூபாய் தரேன்...' 'என் புள்ளைய, மனைவிக்கிட்ட மட்டும் சேர்த்திடுங்க...' வைரலான நூதன அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 14, 2020 11:02 AM

துபாயில் தொழிலதிபராக இருக்கும் இந்தியர் ஒருவர், திருச்சியில் இருக்கும் தனது மகனை தன் மனைவியிடம் சேர்த்தால் 10 லட்சம் ருபாய் பரிசளிப்பதாக அறிவித்த செய்தி இணையங்களில் வைரலாகி வருகிறது.

10 lakh Rupee gift announcement if his son joins his wife

ஸ்ரீகுமார் என்ற இந்தியர் துபாயில் ரசயான தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு  சுனிதா என்ற மனைவியும் ஆனந்தா மற்றும் விஷ்ணு என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருகின்றனர்.

திருச்சியில் CA படிக்கும் இவரது மூத்த மகன் கொரோனா ஊரடங்கால் அங்கேயே சிக்கியுள்ளார். இந்த இக்கட்டான காலத்தில் தனது மனைவியும் குழந்தையும் பிரிந்து இருந்தது மிகவும் வருத்தமளித்துள்ளது. இந்நிலையில் தனது மகன் ஆனந்தாவை குடும்பத்தோடு சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தனது மகனை ஹெலிகாப்டர் மூலம் கர்நாடகா அழைத்துச் செல்ல ஸ்ரீ குமார் முயன்றுள்ளார். இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த ஸ்ரீ குமார் நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்றைக்குள் திருச்சியில் இருக்கும் தனது மகனை யார் மங்களூருவில் இருக்கும் தனது மனைவியிடம் சேர்க்கின்றார்களோ அவர்களுக்கு 10 லட்சம் தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

.இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த 5-ம் தேதியே பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை அறிந்த பல தன்னார்வலர்களும், பல  அரசியல் வாதிகளும், பத்திரிக்கையாளர்களும் இலவசமாகவே உதவிகளை செய்ய முன்வந்துள்ளது பாராட்டத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் தொழிலதிபரான ஸ்ரீ குமாரின் மகன் ஆனந்தாவிற்கு தற்போது கர்நாடகாவிற்கு செல்லும் இ-பாஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.