‘வயதான தாய்க்கு நடந்த கொடூரம்..’ மனைவியுடன் சேர்ந்துகொண்டு மகன் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 21, 2019 11:25 AM

துபாயில் மனைவியுடன் சேர்ந்து தாயைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்த இந்திய இளைஞரை அந்நாட்டு காவல்துறை கைதுசெய்துள்ளது.

Mother tortured and starved to death by her own son in Dubai

கைது செய்யப்பட்டுள்ள இளைஞரின் தாய் கடந்த ஜூலை மாதம் மகனுடன் தங்குவதற்காக இந்தியாவிலிருந்து துபாய் சென்றுள்ளார். அப்போதிலிருந்து மனைவியுடன் சேர்ந்துகொண்டு தாயை அவர் கொடுமைப்படுத்தியுள்ளார். ஒருநாள் பலத்த காயங்களுடன் நிர்வாணமாக அவர் வீட்டு மாடியில் கிடந்ததைப் பார்த்து எதிர்வீட்டில் வசிக்கும் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்குக்கூட அந்த வயதான பெண்மணியின் மகன் உதவவில்லை என அந்தப் பெண் வருத்தத்துடன் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது கருவிழிகள் சிதைக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் அவருக்கு தீக்காயங்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் உடலின் பல பாகங்களில் எலும்புமுறிவு இருந்ததால் அவர் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எதிர்வீட்டுப் பெண் அளித்த புகாரின்பேரில் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்த இந்திய இளைஞரையும், அவரது மனைவியையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #MOTHERANDSON #TORTUREDTODEATH