'கடைசி வர அம்மா முகத்த கூட பார்க்க முடியல...' 'அவங்களுக்காக தான் வேலைய விட்டேன்...' செல்போனில் மகனுக்கு வந்த அதிர்ச்சி செய்தி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாயின் இறுதி நாட்களில் அவருடன் இருப்பதற்காக துபாயிலிருந்து வேலையை ராஜினாமா செய்து இந்தியா திரும்பிய உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞரால், கடைசி வரை தாயின் முகத்தை பார்க்காமல் இறுதி சடங்கு நடத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த ஆமிர் கான்(30) என்ற இளைஞருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுள்ளார். தற்போது ஆமிர் கானின் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் துபாயிலிருந்து இந்தியா திரும்ப முடிவெடுத்திருந்தார். துபாயில் வெறும் 20 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டதால் தன் தாய்க்காக வேலையை ராஜினாமா செய்து இந்தியா திரும்பினார் ஆமீர்.
கொரோனா அச்சம் காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டதால் பல போராட்டங்களுக்கு பின் கடந்த மே 13ம் தேதி இந்தியா திரும்பினார். மேலும் மருத்துவமுறை படி கடந்த 10 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் அமீர்கான். எப்படியோ இனி அம்மா உடன் இருக்கலாம் என நினைத்த அமீருக்கு செல்போன் அழைப்பில் கிடைத்த செய்தி அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அமீரின் அம்மா கடந்த சனிக்கிழமை இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் கூறினர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அமீர், மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி இறுதியாக தன் அம்மாவின் முகத்தை காண அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தன் அம்மாவின் இறுதி நாட்களில் அவருடன் நேரத்தை செலவழிக்கவும், அவரை பார்த்துக்கொள்ளவும் வேலையை ராஜினாமா செய்து இந்தியா திரும்பிய அமீர் கடைசி வரை தாயின் முகத்தை கூட பார்க்கமுடியாமல் நிகழ்ந்த இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.