'மொத நாளே இப்படியா?'..'பெண் நிரூபருக்கு'.. நேரலையில் முத்தம் கொடுத்த திடீர் நபர்.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 27, 2019 10:02 PM

பெண் நிரூபர் ஒருவர் நேரலையில் செய்திகளை ரிப்போர்ட் செய்துகொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த நபர் ஒருவர் திடீரென கேமராவின் பிரேமுக்குள் நுழைந்து செய்தி நிரூபருக்கு முத்தம் கொடுத்துவிட்டு, கண் இமைக்கும் நொடிக்குள் நகர்ந்து சென்ற காட்சியும் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

harassment case, man kissed woman reporter in live

வாஷிங்டன்னைச் சேர்ந்த வேவ்-3 தனியார் சேனலுக்காக, ஒரு நிகழ்ச்சி ஒன்றை நேரலையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் பெண் நிரூபர் ஒருவர். ஆனால் அந்த நிகழ்ச்சிதான் சாரா ரிவஸ்ட் என்கிற அந்த பெண்ணுக்கு நேரலையில் முதல் நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

சிவபூஜையில் கரடி புகுந்ததுபோல, முதல் நிகழ்ச்சியிலேயே அவருக்கு வந்தது பெரிய சிக்கல். அவர் செய்தியை நேரலையில் கூறிக்கொண்டிருந்தபோதே, எங்கிருந்தோ திடீரென உள்ளே வந்த 42 வயது எரிக் குட்மேன் என்கிற நபர், அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின் அந்த வீடியோவும் வேவ்-3 சேனலில் ஒளிபரப்பாகியதை அடுத்து, அந்த இளைஞர் மீது பாலியல் சீண்டல் புகாரை  சாரா ரேவிஸ்ட் அளித்தார். இதனிடையே சாரா அளித்த பேட்டியில், எரிக் மீதான காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். இதேபோல் எரிக் சாராவுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தார்.

ஆனால் தொடர்ந்து எரிக் மற்றும் அவர்போன்று யாரும் பெண்களின் மீது இப்படியான சீண்டல்களை செய்யக்கூடாது என்பதால்,  அவருக்கு குறைந்த பட்ச சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி எரிக் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : #NEWS #ANCHOR #TV #CHANNEL #HARASSMENT