லாட்ஜில் ‘ரூம்’ எடுத்து தங்கி... இளைஞர் பார்த்த வேலை... கதவைத் திறந்து பார்த்து... அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 15, 2019 07:29 PM

லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்குவது போல் நடித்து, பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி. டிவியை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young man who stole LED TV from the lodge in villupuram

விழுப்புரத்தில் 4 முனை சந்திப்பு அருகே கே.வி.ஆர். என்ற தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கையில் காலிப் பெட்டியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்துள்ளார். பின்னர் அறைக்கு சென்ற அவர், சிறிது நேரத்திலேயே அறையை பூட்டிவிட்டு வெளியேச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறைக்கு  திரும்பவில்லை.

இதனால் தங்களிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தனர். அப்போது பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான 22 இன்ச் எல்.இ.டி டிவி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அறைக்கு வரும்போது கையில் கொண்டு வந்த பெட்டிக்குள் டிவியை மறைத்து வைத்து இளைஞர் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் போலி ஆதார் கார்டு மூலம் அறை எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

Tags : #STOLE #STEALS #TV #LED #MAN