'தனி ஆளாக விமானத்தில் வந்த சிறுவன்...' '3 மாசத்துக்கு அப்புறம் என் புள்ளைய பார்க்கிறேன்...' தவிப்போடு இருந்த தாய் மகிழ்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியா5 வயது சிறுவன் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் தனியாளாக பயணித்து, 3 மாதங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த விஹான் ஷர்மா என்ற 5 வயது சிறுவன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வந்த காரணத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானம் மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கியது. இதன் காரணமாக டெல்லி சென்ற விஹான் வீடு திரும்ப இயலாமல் பெற்றோரை பிரிந்து அங்கேயே தங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு திரும்பிய விமானத்தில் 5 வயது சிறுவன் தனி ஆளாக பயணித்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார் விஹான்.
டெல்லி - பெங்களூரு விமானத்தில் சிறப்பு பயணிகள் பிரிவில் பயணித்த விஹானை வரவேற்க பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்தார் அவரது அம்மா.
இதுகுறித்து விஹானின் அம்மா கூறும் போது, ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இயக்கப்படாததால் என் மகனை 3 மாதங்கள் பிரிந்திருந்தேன், தற்போது எனது 5 வயது மகன் டெல்லியில் இருந்து தனி ஆளாக விமானத்தில் பயணித்துள்ளான். என் மகனை சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளேன்' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று மட்டும் 60 விமானங்கள் புறப்பட்டு செல்லவும், 54 விமானங்கள் வந்து சேரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
