'இந்த அம்மாவ விட, பாட்டி தான் உனக்கு முக்கியம் இல்ல...' 'பெத்த புள்ளன்னு கூட பார்க்காம, 6 வயசு மகனை...' குலை நடுங்க செய்யும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன் மாமியார் மீது அதிகளவில் பாசம் வைத்த மகனை தாயே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதுள்ள குல்விந்தர் கவுர் என்பவரின் கணவர் இத்தாலியில் பணிபுரிந்து வருவததால் குல்விந்தர் தன் 6 வயது மகன் மற்றும் மாமியார் மாமனாருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் வசித்து வருக்கிறார். இந்நிலையில் எப்போதும் குலவிந்தருக்கும் அவருடைய மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதமும், சிறிய சண்டைகளும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஒரே மகன் எப்பொழுதும் தன் மாமியாரிடம் பாசமாக இருப்பது அவருக்கு குலவிந்தருக்கு இன்னும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்பொழுதும் போல் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் சிறுவன் தனது பாட்டியிடம் ஓடியுள்ளான். இதனைப் பார்த்த குல்விந்தர் கோபமடைந்து சிறுவனை இழுத்து வந்து அறையில் அடைத்து, 'உனக்கு என்ன விட பாட்டி தான் முக்கியமா? ' என சொல்லி அருகில் இருந்த கத்தியை எடுத்து சொந்த மகனையே தாக்கியுள்ளார். படுகாயமடைந்து மயக்கத்தில் இருந்த சிறுவனை அக்கம்பக்கதோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். ஆனால் சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குல்விந்தர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயமடைந்த குலவிந்தரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சொந்த மகனையே மாமியார் மீதிருந்த வெறுப்பு காரணமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
