‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’!.. ‘பாதியில் நின்ற கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 21, 2020 04:25 PM

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் மாயமானதால் இளம்ஜோடியின் திருமணம் பாதியிலேயே நின்றது.

Groom\'s father and Bride\'s mother fall in love Elope in Gujarat

குஜராத் மாநிலம் சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கும், நவ்ஸ்ரி பகுதியைச் சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கு கடந்த 1 வருடத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதனிடையே இரு வீட்டாரும் அடிக்கடி பேசி நெருக்கமாகியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி முதல் மணமகனின் தந்தையும் (ஜவுளி தொழிலதிபர்), மணகளின் தாயும் (வைர கைவினைஞரின் மனைவி) திடீரென மாயமாகியுள்ளனர். இதனால் இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து இரு வீட்டினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் இளம்ஜோடிகளின் திருமணம் பாதியிலேயே நின்றுள்ளது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாயமான இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் பழக்கமானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ஜோடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GUJARAT #GROOM #FATHER #BRIDE #MOTHER #LOVE #MARRIAGE