காதலர் கண்முன்னே... இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்... உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 19, 2020 05:45 PM

வேலூரில் காதலர் கண்முன்னே கத்திமுனையில் காதலி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vellore: Woman Harassed by 3 youth in front of her lover

வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், அங்குள் பிரபல ஜவுளிக் கடை ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். அதேக் கடையில் காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே கடையில் வேலைப் பார்ப்பதால், காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 9.30 மணிக்கு வேலை முடிந்ததும், வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்றனர். பூங்காவின் ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட இளைஞர் கும்பல், காதல் ஜோடி அருகே வந்தனர். திடீரென அவர்கள் இளம் பெண்ணை தனியாக இழுத்தபோது, அதிர்ச்சியான அவரது காதலர் தடுத்தார். இதனால் அந்தக் கும்பல் அவரை அடித்து உதைத்ததுடன், கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி உட்கார வைத்தனர். பின்னர் இளம்பெண் அணிந்திருந்த தங்கக் கம்மலை பறித்தனர். அவரது செல்ஃபோனையும் பறித்து விட்டு, காதலர் கண்முன்னே இளம்பெண்ணை, அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது இளம்பெண்ணை அந்தக் கும்பல் தாக்கியதில், முகத்தில் காயம் அடைந்த அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினார். சத்தம் கேட்டு அந்தப் பகுதிக்கு சிலர் ஓடி வந்ததால், அந்தக் கும்பல் காதல் ஜோடியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் வலியால் அலறினார். செய்வதறியாது திகைத்த அவரது காதலன் இதுபற்றி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் இளம் பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அண்ணா சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல், கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில், ஒருவன் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. அண்ணா சாலையை ஒட்டி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #VELLORE #WOMAN