அவகிட்ட இருந்து 'தப்பிக்க' எனக்கு வேற வழி தெரியல... கல்யாணத்திலிருந்து எஸ்கேப் ஆக... காதலன் செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 23, 2020 12:47 PM

காதலி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே போலீசில் சிக்கிக்கொண்டுள்ளார். இதற்காக அவர் ஸ்பீக்கர் ஒன்றை திருடியுள்ளார்

Girlfriend forced into marriage: Youth stuck in police!

சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் ஜென்னிடம் கூறியுள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அப்பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த டான்ஸ் ஸ்டூடியோவுக்கு சென்று அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடியுள்ளார். திருட்டு புகாரில் உடனடியாக ‘சென்’னை, போலீசார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்த தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிச்சயம் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தெரியும் என கூலாக தெரிவித்துள்ளார். காதலியிடம் இருந்து தப்பிக்க போலீசில் மாட்டினாலும், இந்த சம்பவத்துக்கு பிறகு சென்னின் காதலி பிரிந்து சென்றுவிட்டாரா என தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னின் கதை இணையத்தில் பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது. ''இப்படி ஒரு கதையை இதுநாள் வரை கேட்டதில்லை'' என பலரும் நகைச்சுவையாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #LOVE #ARREST