சின்ன 'குழந்தை' அவன்...! என்ன விட்டுட்டு போய்ட்டான்... கண்கலங்க வைக்கும் முதியவரின் காளைப் பாசம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 17, 2020 02:18 PM

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி இடமலையான். 90 வயது முதியவரான இவர், 20 வருடங்களுக்கு முன்பு, மாயாவு என்ற ஜல்லிக்கட்டுக் காளையைத் தனது சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்து வந்தார். சுற்றுப்புற பகுதியில் நடக்கும் பல ஜல்லிக்கட்டு விழாக்களுக்கும் மாயாவுவை அழைத்துச்சென்று போட்டியில் பங்கேற்கச் செய்தார். பார்ப்பதற்கு முரடன் தோற்றத்தில் இருந்தாலும் மாயாவு, இடமலையான் சொல்லுக்குக் கட்டுப்படும் சிறு குழந்தையாகவே இருந்துள்ளான். இதனால் மாயாவு மேல் அதிக பாசம் கொண்ட இடமலையான், மாயாவுவை விட்டுப் பிரிவதில்லை. இந்நிலையில், 15 வருடங்களுக்கு முன்பு மாயாவு திடீரென இறந்துவிடவே, இடமலையான் துடித்துப்போனார். மாயாவு காளையின் உடலை தனது தோட்டத்தில் அடக்கம் செய்தார்.

A small child by habit His affection for the bull has fascinated

பிறகு, மாயாவு நினைவாக ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தி, தெய்வத்தைப் போல் வணங்கிவருகிறார். அவரோடு அவரது மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரும் மாயாவுக்கு அஞ்சலிசெலுத்துகின்றனர்.

நேற்றும் மாட்டுப் பொங்கலை அடுத்து மாயாவுக்கு அஞ்சலி செலுத்தினார், விவசாயி இடமலையான். மாயாவுவைப் பிரிந்த இடமலையான், அதற்கு பிறகு வேறு எந்தக் காளையையும் வளர்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 90 வயது முதியவர் காளைமீது கொண்ட பாசம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Tags : #LOVE