'கடும் காய்ச்சல், இருமலிலும்'... '30 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்'... 'காட்டடி' அடித்து... 3 'சதங்கள்' விளாசிய 'நாட் அவுட்' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 23, 2020 03:00 PM

ரஞ்சி கோப்பை போட்டியில் கடும் காய்ச்சல், இருமலுக்கு இடையிலும் 3 சதங்கள் வீசி அவுட்டாகமல் ஒரு வீரர் சாதித்துள்ளார்.

I should go to bat despite fever, cough in Ranji Trophy

மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணி 625 ரன்கள் குவித்ததும் டிக்ளேர் செய்தது. உபேந்திர யாதவ் இரட்டை சதமும், அக்‌ஷ்தீப் நாத் சதமும் அடித்து அசத்தினர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, முதலில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்து திணறியது. 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் அடித்திருந்தபோது, சர்ஃபராஸ் கான், சித்தேஷ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் திசையை மாற்றினர்.

இதில் மும்பையைச் சேர்ந்த 22 வயதான சர்ஃபராஸ் கான் காட்டடி அடித்ததில், அவரது அணியினர் மட்டுமின்றி எதிரணியினரும் மிரண்டு போயினர். ஏனெனில் 2 நாட்கள் முழுதும் களத்தில் காய்ச்சலுடனும், இருமலுடனும் ஆடி, 391 பந்துகளில் 30 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசியுள்ளார். அனைத்திற்கும் மேலாக உத்தரப்பிரதேச அணியின் மிகப்பெரிய இலக்கை கடக்க வேண்டும் என்ற இமாலயக் குறிக்கோளும் அவரை உந்தியுள்ளது. ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், விடாமல் அதிரடி காட்டிய சர்ஃபராஸ் கான் 3 சதங்களை நிறைவு செய்தார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

இதுகுறித்து சர்ஃபராஸ் கான் கூறுகையில், ‘எனக்கு 2-3 நாட்களாகவே காய்ச்சல், இருமல், நான் இறங்க முடியாத நிலைதான், எனக்குப் பதில் தாரே இறங்கி விளையாட வேண்டும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு நான் இறங்கி ஆட முடிவு செய்தேன். திங்கள் இரவு கூட நான் உடல் நிலை சரியில்லாமல்தான் இருந்தேன். ஆனால் களத்தில் நான் இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு எப்பவும் உண்டு. இதனால் அணிக்காக களமிறங்க முடிவு செய்தேன்.

எனக்கு உடம்பு சரியில்லை. தேநீர் இடைவேளையின் போது கூட கடும் களைப்படைந்திருந்தேன். 200 ரன்கள்  எடுத்ததும், போதும்  போகலாம் என்று கூட நினைத்தேன். அவர்கள் எடுத்த 600 ரன்களுக்கு, நாங்கள் களத்தில் காய்ந்தது போல், அவர்களும் காய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது’ என்றார். மும்பை ரஞ்சி அணியில் இருந்த ரோகித் சர்மா, 3 சதங்கள் வீசியிருந்த நிலையில், தற்போது சர்ஃபராஸ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Tags : #SARFARAZ KHAN #RANJI TROPHY #CENTUARY #COLD #FEVER