“அடுத்த அதிரடி உத்தரவு!”.. “சோஷியல் மீடியாவில் இத பண்றவங்க லிஸ்டை உடனே ரெடி பண்ணுங்க!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைதளங்கள் தனி மனிதர்களுக்கான கணக்காக இருந்தாலும், உலகம் முழுவதும் உள்ளோருக்கான பொதுத்தளம்.
ஆதலால் அவற்றில் பகிரப்படும் செய்திகளும், தரவுகளும் பல விதமான கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் தற்போது சமூக வலைதளங்களின் தலைமைகளும் அரசுகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆபாசம், அவதூறு கருத்துகளை பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறார் ஆபாச படங்களைப் பார்ப்பவர்கள், பகிர்பவர்களை பிடிக்கத் தொடங்கியது தமிழக காவல் துறை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களையும், பதிவுகளையும் பரப்புபவர்களின் பட்டியலை தயார் செய்து 29ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டுமென சைபர் கிரைம் ஏடிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : #MADRASHIGHCOURT #SOCIAL MEDIA #POST #CYBERCRIME