'ஆந்தையுடன் கமிட் ஆன கிளி!'... 'காதல் மோகத்தில் டூயட்'...

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manishankar | Jan 16, 2020 05:37 PM

ஆந்தையுடன் கிளி காதல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Parrot falls in love with Owl, video goes viral online

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து பல்லுயிர்களுக்கும் உண்டாகும் உணர்வு. உலகம் இயங்குவது இனப்பெருக்கத்தால் தான். அந்த இனப்பெருக்கத்துக்கு அடித்தளமிடுவது காதல் தான்.

மனிதர்களின் காதல், கலை, இலக்கியம், திரைப்படம், ஊடகம் போன்ற சமூகக் கருவிகளால், வரலாற்றில் இடம் பிடித்து, காலத்தால் அழிக்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. ஆனால், இயற்கை அளப்பறியது. பிற உயிர்களின் காதல் வெளிப்பாடும், அன்பு பரிமாற்றமும், நவநாகரிக மனிதர்களின் கண்களுக்குத் தென்படுவதில்லை. 

ஒரே இனத்தைச் சார்ந்த விலங்கினங்கள் காதல் செய்வது இயல்பான ஒன்று தான். இருப்பினும், வெவ்வேறு இன விலங்குகள் காதல் கொள்வது மிக அரிது. அந்த வகையில், ஆந்தை மீது கிளி கொண்டுள்ள காதல் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கிளியின் அன்பும், அது ஆந்தையைக் கொஞ்சும் விதமும், காண்போரை நெகிழச் செய்துள்ளது.

Tags : #PARROT #OWL #LOVE