“உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னா...”... “காதலியிடம் காதலன் போட்ட கட்டளை”.. “அதிரடியாக கைது”!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஆலம்பாடியைச் சேர்ந்தவர் 24 வயதான கலையரசன். கடலூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்த இவர் அங்குள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த 22 வயது இளம் பெண்ணுடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, இருவரும் 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இடையில் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி பலாத்காரமும் செய்துள்ளார்.
அதன் பின், இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். அங்கும் இருவரின் காதல் தொடர, அப்பெண் தன்னை கல்யாணம் செய்துகொள்ள வேண்டி கலையரசனிடம் கேட்டுள்ளார். ஆனால் கலையரசனோ, அப்பெண்ணிடம், ‘உனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் உன்னை கல்யாணம் செய்துகொள்வேன்’ என்று கூறியுள்ளார்.
முதலில் வேறு வழியின்றி கலையரசன் கேட்டுக்கொண்ட படி புகைப்படங்களை அப்பெண்ணிடம் மேலும் மேலும் கலையரசன் அப்படியான புகைப்படங்களைக் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில்தான் அப்பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. ‘எதற்காக இப்படி புகைப்படங்களை வாங்குகிறாய்?’என்று அப்பெண் கலையரசனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கலையரசனோ, ‘என்னையே சந்தேகப்படுகிறாயா?’ என்று கூறி, ஆத்திரத்தில் அப்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை எல்லாம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கலையரசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
