VIDEO: ‘தம்பி நீ என்ன பண்ணாலும் இங்க ஒன்னும் நடக்காது’.. நெட்டிசன்களை மிரள வைத்த ‘சுட்டி’ பூனை..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்இளைஞர் ஒருவர் தான் வளர்க்கும் பூனையுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டிவி பார்ப்பது, செல்லப்பிராணிகளுடன் விளையாடுவது போன்றவற்றில் மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் தான் வளர்த்து வரும் பூனையுடன் கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எப்படி பந்தை போட்டாலும் சாதூர்யமாக ஹோல் விழாமல் தடுத்த பூனையின் செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
