‘பிரவச வலியில் துடித்த கர்ப்பிணி’.. ஆம்புலன்ஸை சுற்றிய ‘சிங்கங்கள்’.. நெஞ்சை பதறவைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரவசத்துக்காக கர்ப்பிணிப் பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது சிங்கங்கள் சுற்றி வழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் உடனே ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென சிங்கள்ங்கள் சூழ்ந்துகொண்டன.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சிங்கள்ங்கள் அப்பகுதியை விட்டு செல்லாததால், பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து சிங்கங்கள் அங்கிருந்து சென்றவுடன், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாயையும், குழந்தையையும் அனுமதித்தனர். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், ஊரடங்கு காலம் என்பதால் வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் வருவதாகவும், அதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸை சுற்றித்திரிந்த சிங்கங்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
