VIDEO: ‘கொலப்பசி’!.. முழு மானை விழுங்கிய ‘மலைப்பாம்பு’.. ‘எப்படி ஜீரணமாகுமோ?’.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Apr 30, 2020 10:00 AM

வனப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று மானை முழுசாக விழுங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Burmese python swallowing a deer goes viral on social media

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இதன்காரணமாக வன விலங்குகள் ஜாலியாக வெளியே சுற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களை வன உயிரின ஆர்வலர்களும், அதிகாரிகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் துத்வா தேசியப் பூங்காவில் பர்மா மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த பர்மா மலைப்பாம்பு கடுமையான பசியில் இருக்கிறது. ஒரு முழு மானை அப்படியே விழுங்கிறது’ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சிலர் எப்படி இந்த மலைப்பாம்புக்கு ஒரு முழு மான் ஜீரணமாகிறதோ என பதிவிட்டு வருகின்றனர்.