'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 30, 2020 08:24 PM

பெற்றோர்களை போலீசாரிடம் மாட்டிவிட்ட சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

small boy takes cops to his home and warn parents viral

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும் மாநில அரசுகL தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும்போது தன்னை டியூஷனுக்குச் செல்லுமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாக ஒரு சுட்டிச் சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகார் அளித்தது மட்டுமின்றி, அவர்களை தன் வீட்டுக்கே அழைத்துச்சென்றுள்ளார். அங்கு காவல் துறையினர் பெற்றோர்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.