‘ரெட்டைதலை’ கொண்ட அரிய வகை பாம்பு.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 08, 2020 04:29 PM

இரு தலைகளை கொண்ட அரிய பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rare snake with two heads found in Odisha Video goes viral

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டென்கிகோட் வனப்பகுதியில் உள்ள வீட்டில் இரட்டை தலை கொண்ட பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இது ஓநாய் பாம்பு வகையை சேர்ந்தது என்றும் விஷத்தன்மை அற்றது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பின் உடலில் உள்ள இரு தலைகளும் தனிதனியாக இயங்குகின்றன.

இந்த அரிய வகை பாம்பின் வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாம்பை வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.