'2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரா தாண்டவம் ஆடி வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் உயிர்ச் சேதத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் 500 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பெரும் வெள்ளப்பெருக்கை தற்போது அந்த நாடு சந்தித்துள்ளது. மிச்சிகன் மாநிலத்தில் கனமழையால் இரண்டு அணைகளில் உடைப்பு ஏற்பட்டதால், பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. கடுமையாகப் பெய்த பேய் மழை காரணமாக ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையிலிருந்து பெரும் வெள்ளம் ஆக்ரோஷமாக வெளியேறியது.
மிட்லேண்ட் கவுண்டியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 42 ஆயிரம் மக்கள் வசிக்கும் மிட்லேண்டு நகரின் அனைத்து பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் வெள்ளம் என அமெரிக்காவைச் சோகம் சூழ்ந்துள்ளது.
முகாம்களுக்கு வந்த மக்கள் சோகம் தாளாமல் கதறி அழுதார்கள். 2020 இப்படி ஒரு சோகத்தை அளிக்கும் என நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
