‘கொரோனா நேரத்துல இது என்ன புது பிரச்சனை?’.. ‘சீன’ மக்களை ‘பீதி’ அடைய வச்ச விநோத விபத்து..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 14, 2020 05:50 PM

சீனாவில் சிக்னலில் நின்ற டிரக் ஒன்று மர்மமான முறையில் தூக்க வீசப்பட்டசிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Strong winds lift truck off the ground in mysterious incident in China

சீனாவின் யின்சுவான் மாகாணத்தில் சாலையில் சிக்னலுக்காக சில கார்கள் காத்திருந்தன. அப்போது வீசிய சக்தி வாய்ந்த காற்றினால் சாலையில் நின்றுகொண்டிருந்த டிரக் ஒன்று அந்தரத்தில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சுமார் 1.8 டன் எடை கொண்ட டிரக் சக்தி வாய்ந்த காற்றில் தூக்கி வீசப்பட்டதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மேலும் அந்த டிரக்கின் பின்புறம் சிக்னலுக்காக மற்ற கார்களுக்கு ஏதும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் சீனாவை புரட்டிப்போட்டுள்ள நிலையில், இதுபோன்ற விநோத விபத்து அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.