நாய்க்கும், சிறுத்தைக்கு ‘வெறித்தனமான’ சண்டை.. கடைசியில் பயந்து ஓடிய சிறுத்தை.. என்ன காரணம்? வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறுத்தையுடன் நாய் சண்டை போட்ட சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் ஒரு வீட்டின் வெளியே நாய் ஒன்று படுத்திருந்தது. அப்போது சிறுத்தை ஒன்று வீட்டுச்சுவரை தாண்டி உள்ளே குதித்துள்ளது. இதைப் பார்த்த நாய் உடனே குரைக்க ஆரம்பித்துள்ளது. இதனால் உடனே நாயின் கழுத்தை சிறுத்தை கவ்வியது. ஆனாலும் விடாமல் சிறுத்தையை விடாமல் நாய் போராடிக்கொண்டே இருந்தது.
அப்போது நாய் தனது வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே இருந்தது. அதற்கு காரணம் வாலை வேகமாக ஆட்டுவதன் மூலம் தனது கோபத்தை நாய் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறுத்தை நாயை கடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் சுவரின் மீது தாவி வெளியேறியது. இவை அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
